பொலன்னறுவையில் இருந்து வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் தனியார் அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதுடன் நால்வர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெலிகந்த வைத்தியசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சாரதியின் அதிக வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என வெலிகந்த பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பேருந்து பயணித்த போது அதில் ஏறக்குறைய 80 ஊழியர்கள் இருந்ததாகவும், விபத்தில் சிறிதளவு காயமடைந்த ஊழியர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.