இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நியுமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ள துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார்.
குழந்தைகளை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு.