அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு தீவின் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
8 பேருடன் பயணித்த V-22 ஓஸ்ப்ரே என்ற விமானம் ஒன்றே இன்று (29.11.2023) விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஜப்பானின் கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.
குறித்த தீவுக்கு மீட்பு படகுகள் மற்றும் விமானங்களை அனுப்பியுள்ள போதிலும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்கள் குறித்து எந்தவொரு தகவல்களும் கிடைக்கவில்லை என ஜப்பானின் கடலோர காவற்படை ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
இராணுவப் பயிற்சிஇலங்கை நேரப்படி காலை 11.17இற்கு விமானம் தரையிறங்க முற்பட்ட போது விமானத்தின் இடது இயந்திரம் தீப்பற்றி எரிந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கின்றது என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் மாதம் நடைபெறும் வழக்கமான இராணுவப் பயிற்சிக்காக இராணுவ வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச்சென்ற போதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதறகு முன்னர், 2016 டிசம்பர் மாதத்தில் ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவில் ஏற்கனவே ஒரு அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.