தென்னிந்திய நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக்கழக நிறுவனருமான விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சற்று மோசமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு நுரையீரல் உதவி தேவைப்படும் என வைத்தியசாலையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக விஜயகாந்தின் உடல்நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவர் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இருப்பினும் அவர் முழுமையாக குணமடைவார் என்று தாம்; தொடர்ந்து நம்புவதாக வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது.
தொண்டையில் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டு இவர் கடந்த நவம்பர் 18ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.