ராய்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான நான்காவது டி20 போட்டிக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், மைதான நிர்வாகத்தால் 2009 முதல் மின் கட்டணம் செலுத்தப்படாததால் மைதானத்தின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலுவை கட்டணமாக 3.16 கோடி இந்திய ரூபாய்கள் காணப்பட்ட நிலையில் 5 வருடங்களுக்கு முன் இந்த மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநிலத்தின் கிரிக்கெட் சங்கத்தினால் தற்காலிகமாக ஒரு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் அது பார்வையாளர்களின் விசேட அறைகளுக்கு மட்டுமே போதுமாக உள்ளது.
தற்போதைய 200 கிலோவால்ட் திறன் கொண்ட தற்காலிக மின் இணைப்பை 1000 கிலோவால்டாக உயர்த்துவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இன்னும் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
2018ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் மின் துண்டிக்கப்பட்ட பிறகு 3 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் குறித்த மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு ஜெனரேட்டர்களை பயன்படுத்தி போட்டி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.