2024ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் இலங்கை வீரர்களான ஏஞ்சலோ மெத்தியூஸ் முதல் வரிசைக்கு முன்னேறியுள்ளதுடன் வனிந்து ஹஸரங்க இரண்டாம் வரிசையை பிடித்துள்ளார்.
முதல் வரிசை வீரர்களின் ஆரம்ப ஏலத்தொகை 2 கோடி இந்திய ரூபாய்களாக காணப்படும் அதேவேளை இரண்டாம் வரிசை வீரர்களின் ஆரம்ப ஏலத்தொகையாக 1.5 கோடி இந்திய ரூபாய்கள் காணப்படுகின்றது.
மேலும், இலங்கை வீரர்களில் ஏஞ்சலோ மெத்தியூஸ் மட்டுமே முதல் வரிசை ஏலத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் டிசம்பர் 19ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.