கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு நேற்று வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அமைந்துள்ள கட்டிடத்தின் பிரதான குளிரூட்டும் முறைமை செயலிழந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெளிநோயாளர் பிரிவு அமைந்துள்ள 8 மாடி கட்டடத்தில் பிரதான குளிரூட்டும் அமைப்பு பழுதடைந்துள்ளதால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆய்வக பரிசோதனை
சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சிகிச்சை தேவைப்பட்டால், தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அமைந்துள்ள 8 மாடிக் கட்டிடத்தில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் சிகிச்சை பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
சீனாவின் நன்கொடை
இது சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தம் புதிய கட்டிடம் மற்றும் அதன் பராமரிப்பு சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சுமார் 2500 நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால், பராமரிப்பை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்ற சம்பவம் ஒன்றின் அடிப்படையில் சீன நிறுவனம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாடு தொடர்பில் தேசிய வைத்தியசாலையின் உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.