யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெல்லவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரயில் தண்டவாளத்திற்கு வந்த பெண் வீட்டில் வளர்த்து வந்த நாயை காப்பாற்ற முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.