கல்விப் பொதுத் தராதர சாதாரண தர சாதாரண தர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை இம்முறை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நான்கு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மேலும், 4 மாணவர்கள் 8Aஇற்கு மேற்பட்ட சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மொத்தம் 18 பேர் சிறந்த சித்திகளைப் பெற்றுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வசந்தகுமார் அபிசன், கஜீபா கமலகாசன், அஸ்வினி கிஸ்ணதாஸ், ஜதுசா கருணாகரன் உள்ளிட்ட மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு பாலிநகர் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் 9A சித்தியினைப் பெற்றுள்ளதோடு, குறித்த பாடசாலையில் 36 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.