காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான COP 28 உயர்மட்ட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ x தளத்தில் மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் செய்தி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான COP28 உயர்மட்ட மாநாடு 54 அரச தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (01.12.2023) டுபாய் எக்ஸ்போ சிட்டியில் ஆரம்பமானது.
இதன்போதே இருவருக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கெஹெலிய ரம்புக்வெல்ல, கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தான ஆகியோருடன் எதிர்கட்சி உறுப்பினர்களான சம்பிக்க ரணவக, அஜித் மான்னப்பெரும உட்பட காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சர்வதேச அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, நிதி அமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ரா பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.