இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.
ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாகும். சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,