"விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ராஜபக்ச தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக எதிரணியினர் முன்வைத்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "போரில் மரணித்த தமது சொந்தங்களைத் தமிழர்கள் நினைவேந்தும் போது அதற்கு புலி முத்திரை குத்த முடியாது.
அதேவேளை, நினைவேந்தல் என்ற பெயரில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி புலிகளை கொண்டாடுபவர்களை கைது செய்யாமல் விடவும் முடியாது. இதற்குள் அரசியல் ஆதாயம் தேடவும் சிலர் முற்படுகின்றார்கள்.
புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. சிலரின் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களுக்கு என்னால் அவர்களின் பாணியில் பதிலளிக்க முடியாது என கூறியுள்ளார்.