மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தை இணையவழி நிதி பரிவர்த்தனைகள் மூலம் பெற்றுக் கொள்ளும் பல கும்பல் ஒன்றை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
ஒன்லைனில் நிதி பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
இந்த முறையின் கீழ் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்ட பின்னர், இந்த குழுக்களின் மோசடியில் சிக்கிய ஏராளமானோர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஒன்லைனில் நிதி பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸார் பொதுமக்களை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே இந்த மோசடி கும்பல்கள் பிடிபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழுக்கள் வெவ்வேறு வழிகளில் பல்வேறு நபர்களை தங்கள் மோசடிகளில் சிக்க வைக்கின்றன.
வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் பல்வேறு நபர்களின் கையடக்க தொலைபேசி எண்களைப் பெறும் இந்த குழுக்கள் அவர்களை ஒன்லைன் முறை மூலம் நிதி பரிவர்த்தனை செய்ய தூண்டுகின்றன.
பின்னர் அந்த நபர்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெறும் இந்த குழுக்கள் அந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துள்ளனர்.
பின்னர், இணையதளம் மூலம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் நுழைந்து, வேறு கணக்குகளில் பணத்தை வரவு வைத்து, அப்பாவி மக்களின் பணத்தைப் பறிக்கும் நடவடிக்கை ஒன்று இந்த குழுவினால் முன்னெடுக்கப்படுகின்றது.