கனடா, ரொரன்ரோவில் 70 குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய, 29 வயதான கீர்த்தன் மங்களேஸ்வரன், 29 வயதான கோபி யோகராஜா, 29 வயதான மிலோஷா ஆரியரத்தினம் மற்றும் 32 வயதான கஜன் யோகநாயகம் ஆகிய தமிழர்களே இந்த 7 பேருக்குள் உள்ளடங்குகின்றனர்.
வாகனத் திருட்டு தொடர்பில் ரொரன்ரோ பொலிஸாரின் விசாரணையின் போதே இந்த 4 தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
சொகுசு வாகனங்கள்
கைது செய்யப்பட்டவர்களிடம் நூறாயிரக்கணக்கான டொலர் பணம் பல சொகுசு வாகனங்கள் உட்பட, 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் Service Ontario ஊழியர்களுடன் இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.