யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
சாவகச்சேரி - இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(05) காலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பிற்பகல் உயிரிழந்துள்ளது.
மேலும் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.