அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்றைய தினம் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபாய் 74 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபாய் 70 சதமாக காணப்பட்டதுடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 317 ரூபாய் 65 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 317 ரூபாய் 25 சதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.