நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் திலினி பிரியமாலிக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திலினி பிறேமாலியை இன்று (06) நீர்கொழும்பு பிரதான நீதவான் விடுதலை செய்துள்ளது.
141 இலட்சம் ரூபா பண பரிவர்த்தனை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட திலினி பிரியமாலிக்கு எதிராக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழக்கை ஒப்படைத்துள்ளது.
இதற்கு குற்றப்புலனாய்வுப்பிரிவினர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரியிருந்த நிலையில், இந்த வழக்கை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இதற்கமைய, இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திலினி பிரியமாலி போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.