இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய செவலவீனங்களை 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்துள்ள 10 பில்லியன் ரூபாவில் முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளமை தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை இந்த விடயத்திற்கு இணங்கியுள்ளது.
அரசாங்கத்திடம் காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதி நிலைமையினால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதியை 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படவுள்ளமை தொடர்பிலும் அமைச்சரவை ஆராய்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.