எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி முதல் கனேடியர்களுக்கு ஜிஎஸ்டி (GST) உடனான வரிவிலக்குடன், வரிச் சலுகையை வழங்கவுள்ளதாக கனேடிய (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, உணவு பொருட்கள், சிற்றுண்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அனைத்தும் வரி இல்லாமல் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வரிச் சலுகையானது, 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சலுகையின் படி, அனைத்து உணவுப் பொருட்களையும் ஜிஎஸ்டி இலவசமாக்குவது கனேடியர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள சேமிப்பை வழங்கும் என அந்நாட்டு அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், வசந்த கால தொடக்கத்தில், தொழில் புரிந்து வரும் கனேடியர்களுக்கு, அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு 150,000 டொலர் வருமானம் ஈட்டியவர்கள் 250 டொலர் பெறுமதியான காசோலையை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.