பாகிஸ்தானில் (Pakistan) வடமேற்கில் உள்ள பழங்குடியின பகுதியில், பயணிகள் வாகனத்தை குறிவைத்து, துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் வரை பலியாகியுள்ளதோடு 29க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள குர்ரம் என்ற பழங்குடியின மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நேற்று (21) நிகழ்ந்துள்ளது.
இந்த பயணிகள் வாகனம் உட்பட்ட சில வாகனங்கள், பொலிஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டு வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்காததோடு, கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் இரண்டு பிரிவினர் இடையே நீண்ட காலமாக நிலபிரச்சினை நீடித்து வருகிறது.
இதன் தொடராக கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மோதலில் 16 பேர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.