சிஐடி விசாரணையில் இருந்து திரும்பிய பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் - 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக நேற்று மீண்டும் அழைக்கப்பட்டு பிள்ளையான் விசாரணைகளுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு தொடர்பான விசாரணைக்காக பிள்ளையான் இரண்டாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகினார்.

இந்நிலையில், குறித்த விசாரணைகளின் போது, ஏப்ரல் - 21 தாக்குதலில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது ஒரு சித்தரிக்கப்பட்டுள்ள, புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பதை உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

MOHAMED SUTHAISY

Hello, I'm Faris Mohamed Suthaisy from Anuradhapura, Sri Lanka. I have diplomas in Information Technology, Web Design, and Computer Hardware Engineering, and I am skilled in professional phone & computer repair and web design . Currently, I'm pursuing a BTEC HND in Computing & Software Engineering at Pearson University. Additionally, I am the Owner and CEO of FAMILY MOBILE and SUNDAY BBC.

புதியது பழையவை

نموذج الاتصال