மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள், மாணவர்கள் மற்றும் ஊடகங்களை வரப்பட்ட சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என அப்போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி போராடியதாக அவரை சுட்டிக்காட்டி உள்ளார்.
தற்பொழுது இந்த சட்டங்களை இரத்து செய்யக்கூடிய அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு மக்களினால் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த சட்டங்களை ரத்து செய்வதற்கான காலம் மலர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வலுவான நம்பிக்கையை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றை பாதுகாத்து கொள்ள வேண்டியது தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பாகும் என சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.