லெபனானின் மத்திய பெய்ரூட்டில் உள்ள கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித் தொடர்பாளர் முகமது அஃபிஃப்(Mohammed Afif) கொல்லப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அதிகாரிகளின் கருத்து படி சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளையும் இதன்போது குறிவைத்ததாக கூறப்படுகிறது.
இது தஹியேஹ் என்று அழைக்கப்படும் ஹிஸ்புல்லாவின் முக்கிய ஒரு பகுதியாகும்.
அங்கு ஹிஸ்புல்லாவின் வலுவான இருப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
லெபனான் அதிகாரிகள் அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவை பரிசீலித்துக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல்கள் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.