இனம்-மதம்-மொழி மற்றும் பிரதேசவாதத்தை இல்லாதொழிப்போம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வன்னித் தேர்தல் களத்தில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.
இந்த நாட்டில் நல்லதொரு எதிர்காலத்தையும், நல்லதொரு சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்காக ம்க்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவோம்.
மக்கள் எமது கட்சிக்கு உற்சாகமாக வாக்களித்து இரண்டு ஆசனங்களை வன்னியில் தந்துள்ளார்கள்.
இனம், மதம், மொழி பிரதேசவாதத்தை இல்லாதொழித்து நல்லதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.