விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று நாட்டிற்கு வருகைத் தரவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சர்வதேச நாணய நியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையில் இந்த குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
அதேவேளை, குறித்த குழு எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து மதிப்பாய்வு தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.