ஹம்பாந்தோட்ட, சூரியவெவ பிரதேசத்தில் திருமண வைபவம் ஒன்றின் போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 பிள்ளைகளின் தந்தை 4 மாதங்கள் 16 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் சூரியவெவ மஹர பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உறவினர்கள் இருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்டு கீழே விழுந்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சூரியவெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
காயமடைந்த நபர் தலா 300000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்த பின்னர் ஏற்பட்ட அவசர சிகிச்சை காரணமாக கடந்த 20 ஆம் திகதி மீண்டும் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிரிழந்துள்ளார்.