நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6,67, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு தகுதியான வாக்காளர்களாக 17,140,354 பேர் காணப்பட்டதாகவும் இதில் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11,815,246 ஆகவும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 11,148,006 ஆகவும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 6,67,240 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த தேர்தலை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்றே கூற முடியும் என பெப்ரல் (PAFRAL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.