அண்டை நாடான இலங்கையின் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக (MDMK ) நிறுவுனர் வை.கோபாலசாமி (V. Gopalsamy) தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், அண்டை நாட்டில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் நேற்று (15) அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள வைகோ, இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழர்களுக்கு எதிரானவர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு ராஜபக்ச அரசாங்கமே காரணம் என்றாலும், அநுரகுமார திசாநாயக்க தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தார்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தி என்பது ஜனதா விமுக்தி பெரமுனாவின் மற்றொரு பதிப்பு மட்டுமே என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.