முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் பருவமழை காரணமாக, நந்திக்கடல், மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுகின்றது.
முல்லைத்தீவு கணுக்கேணிக்குளத்தின் நீர் மற்றும் வற்றாப்பளை தண்ணீரூற்று வயல் வெளியூடான நீர், கேப்பாபிலவு மற்றும் கள்ளியடி பேராறு ஊடான வெள்ளநீர் என பல வழிகளில் மழை நீர் நந்திக்கடலை சென்றடைந்து வருகின்றது.
நந்திக்கடலில் நீர் நிரம்பியுள்ளதால் வட்டுவாகல் மற்றும் 3ஆம் கட்டைப்பகுதி, இரட்டைவாய்க்கால் பகுதிகளில் வீச்சுவலை தொழில் செய்யும் கடற்றொழிலாளர்கள் அதிகளவில் கூடி கடற்றொழிலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லும் காலத்திற்கு ஏற்றவகையிலான தொழிலாக இது அமைந்துள்ளது.
எனினும், 440 மீற்றர் நீளம் கொண்ட வட்டுவாகல் பலம் முன்னோர்களின் கருத்துக்களின்படி 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது.
முல்லைத்தீவு நகரத்தின் நுழைவாயிலாக வட்டுவாகல் பாலம் அனைவரையும் வரவேற்கின்றது. வட்டுவாகல் பாலம் வரலாற்றுத் தொன்மையான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் சின்னமாகும்.
மழைகாலத்தில் அழகாக காட்சி தரும் இடங்களில் வட்டுவாகல் பாலம் மற்றும் நந்திக்கடல் கரைப்பகுதிகள் காணப்படுகின்றன.