முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வீதிக்கு குறுக்க விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தில் நேற்று (20) இரவிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதில் குறிப்பாக வற்றாப்பளை மூன்றாம் கட்டை சந்தி வீதியுடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் தேசிய நீர் வளங்கல் வடிகால அமைப்பு சபைக்கு சொந்தமான குழாய் கிணறு அமைக்கப்பட்ட பகுதி ஒன்றுக்கு அருகில் நின்ற மரம் ஒன்று வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.
இதனால் இந்த வீதியூடான போக்குவரத்தும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.