நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதியில் பயணிப்பவர்களிடம் நகைகளை திருடிய இரு பெண்கள் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர்களும் ஏனையோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட வாடகை கார், 150,000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை அடகு வைத்து பெறப்பட்ட பல ரசீதுகளும் சந்தேகநபர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26- 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் வெஹரயாய, பதுளை, பலஹருவ மற்றும் படல்கும்புர ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
அவர்களை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.