இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக, விழிப்புலனற்றோரின் சார்பில் சுகத் வசந்த டி சில்வாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை வழங்கி, தேசிய மக்கள் சக்தி கட்சி புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.
இந்த வாரம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 686,3186 வாக்குகளை பெற்று 61.56 சதவீதத்தில் வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து, குறித்த கட்சி சார்பில், தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 18 நபர்களின் பெயர்கள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டன.
குறித்த பட்டியலில், விழிப்புலனற்றோர் சார்பில் சுகத் வசந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் 18 உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.
இதற்கமைய, பரிந்துரைக்கப்பட்ட 18 பெயர்கள்:
பிமல் நிரோஷன் ரத்னாயக்க
அனுர கருணாதிலக்க
உபாலி பன்னிலகே
எரங்க உதேஷ் வீரரத்ன
அருண ஜயசேகர
ஹர்ஷன சூரியப்பெரும
ஜனித ருவான் கொடித்துவக்கு
புன்யா ஶ்ரீ குமார ஜயகொடி
ராமலிங்கம் சந்திரசேகர்
நஜித் இந்திக்க
சுகத் திலகரட்ன
லக்மாலி காஞ்சன ஹேமசந்ர
சுனில் குமார கமகே
காமினி ரத்னாயக்க
ருவன் சமிந்த ரனசிங்க
சுகத் வசந்த டி சில்வா
அபுபகர் அதம்பாவா
ரத்னாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க