இலங்கை இராணுவ விவகாரத்திற்குள் சர்வதேசத்தின் திடீர் தலையீடு காரணமாக புதிய நெருக்கடிகள் பல்வேறு வடிவங்களில் ஏற்படுமா என்னும் கேள்வி அரசியல் வட்டாரங்களில் காணப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பாதுகாப்பு படைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவீனங்களை குறைப்பதற்கான கட்டாயத்தை ஜெனீவா முதலில் இருந்தே வலியுறுத்தியுள்ளது என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கான செலவீனங்களை குறைப்பதன் பின்புலத்தில் சர்வதேசங்களின் அழுத்தங்கள் உள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு செலவீன குறைப்பையும், மறுசீரமைப்புக்களையும் அவர்கள் வேண்டி நிற்கின்றார்கள். இருப்பினும், இவற்றை அநுர தரப்பு முழுமையாக ஏற்று கொண்டு பயணிக்குமா என்பதில் சந்தேகங்கள் எழுகின்றன” என தெரிவித்துள்ளார்.