வவுனியா (Vavuniya) உட்பட வடமாகாணத்தினுள் நடமாடும் இரு சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் கிடைப்பின் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கம்பஹா - மினுவாங்கொடை பகுதியில் சுமார் 7 கோடி பெறுமதியான பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் சீதுவ பகுதியைச் சேர்ந்த பிரேசுமனி துஷார இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.டி சமன் ரணசிங்க எனப்படும் இருவரும் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் தற்போது வவுனியா மற்றும் வடமாகண பிரதேசங்களில் நடமாடி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
எனவே, அந்த நபர்களை பொதுமக்கள் யாரும் அடையாளம் கண்டால் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் தொலைபேசி இலக்கமான 0718596422 ஊடாக அல்லது 0716360020 (சிந்தக்க) என்ற தொடர்பு இலக்கத்தக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் அறவித்துள்ளனர்.