புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayaka) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றிபெற்றுள்ள நிலையில், புதிய பதவிகள் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், புதிய பிரதமர் மற்றும் சபாநாயகர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளவர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.