மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொடுப்பேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ( Kader Masthan) தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்ற பின் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டு்ளார்.
மேலும் தெரிவிக்கையில், புதிய கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்.
எமது புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்களுக்கும், அதனை ஏற்றுக் கொண்டு வாக்களித்த வன்னி மாவட்ட மக்களுக்கும் எனது நன்றிகள்.
மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளை இந்த அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொடுக்க என்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பேன்.
இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் எதிர்பார்த்து வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், அவர்களது உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் எடுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் எனது முழு ஆதரவையும் வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.