குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழுள்ள அதிகாரிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரச்சினைகள் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதனை நிவர்த்திப்பதற்கான முறைமையை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.