இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ( MK Stalin )மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கட்சிக் கூட்டத்தின்போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் சிறைகளில் வாடும் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும், நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் இதன்போது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த கட்சிக் கூட்டத்தில், இந்தியத் திணிப்பு தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்களை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.