வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகமானது இன்று (22) வவுனியா கித்துள் வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரால் இந்த அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்டவர்களுக்கு வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.