2024 ஆண்டின் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 151,496 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த அக்டோபர் மாதம் 135,907 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இம்மாதம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 23,660 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,772,211 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.