இலங்கை தமிழரசுக்கட்சி ஒன்றின் மிக முக்கிய கூட்டமொன்றிற்கு சிவஞானம் சிறீதரனை பார்த்து நீங்கள் ஏன் இந்த கூட்டத்திற்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பியவரே எம்.ஏ.சுமந்திரன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் (E.Saravanapavan) தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விடயங்களுக்கும் மத்திய குழு முடிவெடுக்கும் என்றால் அந்த மத்திய குழுவை சுமந்திரனே வழிநடத்துகிறார்.
அனைவரையும் சுமந்திரன் தனது கட்டுப்பாட்டுக்கு உள்ளேயே வைத்திருக்கின்றார்.
இந்நிலையில், தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியில் எறியப்பட்டவர் மீண்டும் கட்சிக்கு உள்நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மக்களையும் சாரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.