தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கான அளவுகோல்களை, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் அல்லது 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் தேசிய பட்டியல் மூலம் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.