சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(04.01.2025) நடைபெறவுள்ளது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 4 விக்கட்டுக்களை இழந்து 316 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதில், ரயன் ரிக்கல்டன் ஆட்டமிழக்காது 176 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

டெம்பா பவ்மா 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் சல்மான் அகா 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.