வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், இறந்த டொல்பின்களை மீட்டு பரிசோதனை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இது தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள் உயிரிழந்த டால்பின்கள், வலையில் சிக்கியதால் அவை இறந்ததாக ஊகிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் அவற்றின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.