நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளின் காரணமாக அவசரமாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம்(Kabir Hashim) தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் ஊடகங்களிடம் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஆட்சியை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அதற்கான அறிவினை, பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வித அவசரமும் கிடையாது என கபீர் ஹாசீம் விளக்கமளித்துள்ளார்.

இதன்படி, தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் பாரியளவு அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் நாட்டை ஆட்சி செய்வதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.